காட்டுக்குள் காட்டெருமை கறிசோறு.. புள்ளிங்கோஸை தூக்கிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தவசிமடை சிறுமலை அடிவாரத்தில் கரட்டுகாட்டு பகுதியில் கும்பலொன்று காட்டெருமையை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, வனத்துறை அதிகாரி மனோஜ் தலைமையில் வன காவலர்கள் சிறுமலை அடிவாரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தருணத்தில், வனப்பகுதியிலிருந்து கும்பல்லொன்று காட்டு எருமையை இறைச்சியாக சமைக்க முயன்ற சமயத்தில் கையும் களவுமாக பிடிபட்டது.

இவர்களை சுற்றி வளைத்து வனத்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில், தவசிமடை பகுதியை சேர்ந்த பச்சையப்பன் (வயது 39), ஸ்டீபன் (வயது 22), மைக்கேல் (வயது 23), பாஸ்கர் (வயது 20), அருள்பிரிட்டோ (வயது 23) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 

இவர்கள் காட்டெருமையை வேட்டையாடிய நிலையில், 20 கிலோ காட்டு எருமை இறைச்சி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தலைமறைவாக இருக்கும் தவசிமடை சார்ந்த வடிவேல் (வயது 33) என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul forest department


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->