திண்டுக்கல் | மின்வாரிய பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை:  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், பழனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 52) இவர் தூத்துக்குடி, கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் குடும்பத்துடன் திண்டுக்கல்லை அடுத்துள்ள பாலமரத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். 

இவரது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் என சோதனை நடத்திய போது கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காளிமுத்து வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர். இவர் முன்னதாக பெண்ணாகரத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று கோவில்பட்டிக்கு செயற்பொறியாளராக உள்ளார். 

இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கவில்லை. 

வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணம், நகை ஆகியவற்றை சோதனை மேற்கொண்டனர். மேலும் காளிமுத்து மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Anticorruption officials raid power engineer house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->