திருவண்ணாமலை : இன்று பவுர்ணமி கிரிவலத்திற்கு தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்.. தடையை மீறி கிரிவலம் செல்லும் பக்தர்கள்..! - Seithipunal
Seithipunal


தடையை மீறி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரி வலம் புகழ்பெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பௌர்ணமியில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்களை வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.  இந்நிலையில், தடையையும் மீறி நேற்று மாலை முதல் பக்தர்கள் கிரிவலம் பகுதியில் அதிக அளவு  வருகை தந்தனர்.

14 கிலோ மீட்டர் கிரிவல பாதையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் செல்ல தடை விதிக்காததால் பக்கதர்கள் உற்சாகமாக    கிரிவலம் சுற்றி வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் பல பக்தர்கள் வருகை தருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees who crossed the barrier


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->