சென்னையில் பரபரப்பு... தியேட்டரின் தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்... போலீசார் தீவிர விசாரணை..!! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக நேற்று மதியம் ஒரு மணி அளவில் லாரி வந்துள்ளது.

தண்ணீர் நிர்ப்பதற்காக தொட்டியை திறக்கும் பொழுது சடலம் ஒன்று மிதந்துள்ளது. உடனடியாக லாரி ஓட்டுனர் ராமலிங்கம் திரையரங்கு உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து கோயம்பேடு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீர் தொட்டியில் இருந்த சடலத்தை மீட்டனர்.

தண்ணீர் தொட்டியில் இருந்த சடலம் அழகிய நிலையில் இருந்ததால் போலீசார் திரையரங்கு ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திரையரங்கில் வேலை செய்யும் எலக்ட்ரீசியன் வெங்கடேச பெருமாள் என்பது தெரிய வந்தது.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வேலைக்கு வந்த வெங்கடேச பெருமாள் தண்ணீர் தொட்டியின் மோட்டரை பராமரிப்பு செய்யும் பொழுது மதுபோதையில் உள்ளே விழுந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

இதனை அடுத்து வெங்கடேச பெருமாளின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு தியேட்டரின் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dead body in rohini theatre water tank in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->