அம்மனுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த நாட்களில் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்லதே நடக்கும் என்பதே நம்பிக்கை.

இந்த நிலையில் கடந்த ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயிலுக்கு பெண்கள் குடும்பத்துடன் சென்று பூஜை செய்து வழிபட்டனர். அதேபோல் நேற்று 2வது ஆடி வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் முத்துக்கண் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி உலக மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதில், ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 என அனைத்து ரூபாய் நோட்டுக்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Currency decoration to God in Trichy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->