வாழ்வாதாரத்தை இழந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்கள்.. மிரட்டும் தனியார் வங்கி..!! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் குளறுபடிகளாலும், கடன் பிரச்சினைகளாலும், பஞ்சாப் நேஷனல் வங்கி கையகப்படுத்தும் நோட்டீஸ் ஒட்டி, ஆலையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்த காரணத்தால் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்த ஆலை செயல்படாமல் இருந்து வருகிறது.

ஏற்கனவே அந்த சர்க்கரை ஆலையில் பணியாற்றி வந்த சுமார் 220தொழிலாளர்களுக்கு 2ஆண்டுகள் (2016-17, 2017-18) போனஸ் வழங்கப்படாததோடு, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே சம்பளமும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த LIC, EPF உள்ளிட்ட பணப் பலன்களையும் ஆலை நிர்வாகம் வழங்காமல் இருந்துள்ளதால் இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலாளர் உதவி ஆணையருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது.

அதன் பிறகு தொழிலாளர்கள் தரப்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் என அரசின் கவனத்திற்கு பலமுறை கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் இதுவரை தொழிலாளர்கள் நலனை கவனத்தில் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தமிழக அரசு முன் வராதது கண்டனத்திற்குரியது . இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சூழலில் அம்பிகா சர்க்கரை ஆலை குடியிருப்பில் வசிக்கும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்புகளை பஞ்சாப் நேஷனல் வங்கி நியமித்துள்ள தனியார் ஏஜென்சி நபர்கள் துண்டித்திருப்பதோடு, வேலையிழந்து தொழிலாளர்கள் தவித்து வரும் சூழ்நிலையில் மனிதாபிமானமின்றி உடனடியாக குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்வதையும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சர்க்கரை ஆலை மற்றும் வங்கி நிர்வாகத்தின் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் தொழிலாளர்களை பலிகடா ஆக்காமல் அவர்களுக்கு ஏற்கனவே வழங்க வேண்டிய போனஸ், சம்பள நிலுவைத் தொகை மற்றும் LIC, EPF உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கிடவும், சுமார் 220தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிடவும் தமிழக அரசு உரிய ஆவண செய்ய வேண்டும். அத்துடன் தற்போது வரை அம்பிகா சர்க்கரை ஆலை குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாற்று பணிகள் கிடைக்கும் வரை குடியிருப்புகளை காலி செய்ய சொல்லி வங்கி ஏஜென்டுகள் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், குடியிருப்புகளில் வங்கி ஏஜென்டுகளால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை உடனடியாக வழங்கிடவும் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கரை சேர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வலியுறுத்துகிறோம் " என்று கூறப்பட்டுள்ளது..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Sugarcane Factory workers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->