#JustIN: கடலூரில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்.. 500 க்கும் மேற்பட்ட காவல்துறை குவிப்பு.! - Seithipunal
Seithipunal


வெள்ளிக்கடற்கரையில் அனுமதியின்றி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில், 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தை சார்ந்த கடலோர மீனவ கிராம மக்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வரும் நிலையில், மத்திய-மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறி கடலூர் தேவானம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் மீனவர்கள் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

கடலூர் மாவட்டத்தில் 49 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளது. இங்குள்ள 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். பிற மீனவ கிராமங்கள் இழுவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். 

மத்திய, மாநில அரசுகள் கடல்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதித்துள்ள நிலையில், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பான போராட்டம் நடந்து வந்த நிலையில், ஊரடங்கால் அனைத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 

தற்போது, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இது அனுமதியில்லாமல் நடைபெற்றாலும், பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் அப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Silver Beach Fisherman Protest Police Protection Tighten due to Avoid Violence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->