காட்டுமன்னார்கோயில் குறுங்குடி பட்டாசு ஆலை வெடிவிபத்து.. டிடிவி தினகரன் இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குறுங்குடி கிராமம் மற்றும் கண்டமங்கலம் கிராமங்களில் பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த பட்டாசு ஆலையில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் திருமண விசேஷங்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்களின் விழாக்களுக்கு, பிறந்தநாளுக்கு, கோயில் திருவிழாக்களுக்கு, துக்க காரியங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்விட் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில், " காட்டுமன்னார்கோயிலை அடுத்த குறுங்குடி பகுதியிலுள்ள பட்டாசு தொழிலகத்தில் விபத்து நேரிட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் உயிரிழந்த பெண் தொழிலாளர்கள் 9 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற்று வர வேண்டுகிறேன்.

அதே நேரத்தில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2 லட்சம்  நிதி போதுமானதல்ல. இன்னும் கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் பட்டாசு தொழிலை நம்பி இருப்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு ஆலைகளை இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kattumannarkoil Fire Factory Accident regret by TTV Dhinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->