கடலூர், காட்டுமன்னார்கோவில் பட்டாசு ஆலை வெடி விபத்து.. இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்த முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குறுங்குடி கிராமம் மற்றும் கண்டமங்கலம் கிராமங்களில் பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த பட்டாசு ஆலையில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் திருமண விசேஷங்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்களின் விழாக்களுக்கு, பிறந்தநாளுக்கு, கோயில் திருவிழாக்களுக்கு, துக்க காரியங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

மேலும் தீபாவளி பண்டிகைக்கு இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகளை சுற்றுப்புற கிராம மக்கள் தேடிவந்து ஆலைகளில் பட்டாசு வாங்குவது வழக்கம். இந்த நிலையில், காட்டுமன்னார்கோவில் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த 9 பேர் பலி என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்ட செய்தி அறிந்து மிகுந்த துயரை அடைந்தேன். 

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை பதிவு செய்துகொள்கிறேன். விபத்தில் காயமடைந்த மற்றும் பலியான நபர்களுக்கு தேவையான அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மேற்பார்வையிட்டு தேவையானதை செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம் நிவாரணம் " வழங்குவதாகவும் முதல்வர் தெரிவித்துளளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kattumannarkoil Fire Accident Tamilnadu CM Regret and Relief Fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->