காதல் என்ற பெயரில் கொடுமை…! போக்சோ சட்டத்தில் சிக்கிய திருப்பத்தூர் இளைஞர்...!
Cruelty name love Tirupattur youth caught under POCSO Act
திருப்பத்தூர் அருகே கோணாப்பட்டு பகுதியைச் சேர்ந்த 19 வயது கூலித்தொழிலாளி பிரேம்குமார், தனது ஊரிலேயே வசிக்கும் 13 வயது சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சிறுமியிடம் காதலிக்குமாறு அடிக்கடி வற்புறுத்தியதோடு, தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் அதிருப்தியடைந்த சிறுமியின் பெற்றோர், பிரேம்குமாரை எச்சரித்தும் பயனளிக்கவில்லை.
அவர் தொல்லையை நிறுத்தாததால், சிறுமியின் குடும்பம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
இந்த புகாரினைப் பெற்ற காவலர்கள் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர் காவலர்கள் பிரேம்குமாரை கைது செய்து காவலில் எடுத்தனர்.
English Summary
Cruelty name love Tirupattur youth caught under POCSO Act