பாலில் கலப்படமா? மாட்டு தீவனத்தில் கலப்படமா?..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உணவு மற்றும் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் சார்பில் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலின் தரத்தை தற்போது ஆய்வு செய்துள்ளது. 

இந்த ஆராய்ச்சி கடந்த மே மற்றும் அக்டோபர் மாதங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து மொத்தமாக பெறப்பட்ட ஆறாயிரத்துக்கும் அதிகமான பால் பாக்கெட்டின் மாதிரியை எடுத்து சோதனை செய்ததில்., சுமார் 45% பலப்படுத்தப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள் மற்றும் மீதமுள்ளவை மூலப்பொருட்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வுகளின் தகவலின்படி., இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் செயல் அதிகாரியான பவன் அகர்வால் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்தாவது., பால் பொருட்களை பொருத்தவரை மக்கள் கலப்படம் அதிகம் உள்ளது என்று நினைக்கின்றனர். இதனைவிட பெரும் பிரச்சனை ஒன்று உள்ளது. 

பாலில் கலப்படம் என்பதை விட மாசுபாடு பிரச்சனை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட பால் மாதிரி சோதனை செய்த சமயத்தில்., இவற்றில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் பொருட்களை அதிகம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்., "அப்லாடாக்சின் - எம்1" என்ற வேதிப்பொருள் இருப்பதும் தெரியவந்தது.  

"அப்லாடாக்சின் - எம்1" வேதிப்பொருள் மாட்டிற்கு அளிக்கப்படும் உணவில் இருந்து வருவதையும் கண்டறிய முடிந்தது. பால் சார்ந்த பொருட்களை விற்பனை நிறுவனங்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்., அவற்றின் தரத்தை ஆய்வு செய்து பின்னர் விற்பனைக்கு அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாக்கெட் பாலில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 38 விழுக்காடு தரமற்ற பால்கள் என்பதும்., இவற்றில் 10.4 விழுக்காடு அளவில் ஆனால் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ நிர்ணயம் செய்த வரம்புகளுடன் பொருத்தம் இல்லாமல்., கொழுப்புகள்., மால்ட்டோ டெக்ஸ்ட்ரின் மற்றும் சர்க்கரை போன்ற அசுத்தங்கள் வரம்புகளுக்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம்., டெல்லி., கேரள மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் பாலில் "அப்லாடாக்சின் - எம்1" ரசாயனம் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த "அப்லாடாக்சின் - எம்1" இரசாயன மாற்றம் கால்நடை தீவனத்தில் உள்ள கலப்படத்தால் ஏற்பட்டுள்ளதாகவும்., இந்த "அப்லாடாக்சின் - எம்1" இரசாயன மாற்றத்திற்கு பாலில் கலப்படம் காரணமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

இது இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 12 விழுக்காடு அளவிலான மாதிரியில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்., தெலுங்கானா., மத்திய பிரதேசம்., கேரளா மாநிலங்கள் தான் அதிகமாக கலப்படம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cow eating food have a mixture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->