கள்ள நோட்டு தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞர்! கையும் களவுமாக பிடித்த போலீசார்!  - Seithipunal
Seithipunal


சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இரண்டு நபர்களை கைது செய்த காவல் துறையினர், ரூ. 45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலில் தெரிவித்திருப்பதாவது, நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி. இவர் வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் எதிரில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். 

இவரது கடைக்கு நேற்று மாலை ஒரு நபர் காய்கறி வாங்கிவிட்டு அதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அதனை வாங்கி பார்த்த மணி களநோட்டு போல் உள்ளது என சந்தேகமடைந்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

தகவலின் பெயரில் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது அந்த நபர் கொடுத்த பணம் கள்ள நோட்டு என்பது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் பிடிபட்ட நபர் பள்ளிக்கரணை பாலாஜி நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை (வயது 65) என்பதும் இவரது நண்பர் சுப்பிரமணியம் (வயது 62) இவர் வழக்கறிஞர் என்பது தெரியவந்தது. 

விருகம்பாக்கத்தில் இருவரும் சேர்ந்து ஒரு இடத்தில் பிரிண்டிங் மற்றும் கட்டிங் இயந்திரங்களை வைத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர்.  

நுங்கம்பாக்கம் போலீசார் கள்ள நோட்டு அச்சிட்டதாக கைது செய்யப்பட்டுள்ள அண்ணாமலை மற்றும் சுப்பிரமணியன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்த  ரூ. 45.2லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளையும் அதற்காக பயன்படுத்திய பிரிண்டிங் இயந்திரம் மற்றும் கட்டிங் இயந்திரம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

counterfeit notes making involved Ex-soldier lawyer 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->