ரேஷன் கடையில் இப்படி நடக்கிறதா? தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், குடும்பஅட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க வரும்போது கூடுதலாக சோப்பு, அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களை வாங்க ஊழியர்கள் வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் அளித்தனர். 

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நியாயவிலை கடைகளிலும் சோப்பு, சேமியா, வாங்காவிட்டால் நியாயவிலைப் பொருட்கள் கிடையாது என்று ஊழியர்கள் தெரிவிப்பதாக சமூகஊடகங்களில் தகவல் வெளியானது.

,இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் புதிய நியாயவிலைக் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். 

அதன் பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  'நியாயவிலைக் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது.

அவ்வாறு கட்டாயப்படுத்தினால் அந்த நியாயவிலைக்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cooperetive department minister open new departmental store


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->