குக் வித் கோமாளி புகழ் விரட்டியடிப்பு..! அனுமதி வாங்காமல் ஆர்ப்பாட்டம் செய்த நிறுவனத்தால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற செல்போன் கடை நிறுவனமாக A to Z மொபைல் சேல்ஸ் & சர்வீஸ் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த கடையின் கிளை  வண்ணாரப்பேட்டை பகுதியில் திறக்கப்படவுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை கிளை A to Z கடையின் கிளை திறப்பு விழாவிற்கு விஜய் டிவி புகழ் குக்வித் கோமாளி நடிகர் புகழை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்த நிலையில், அவர் இன்று வண்ணாரப்பேட்டைக்கு வந்திருந்தார். 

புகழ் வரும் செய்தியை அறிந்த ரசிகர்கள் பலரும் அங்கு குவிந்த நிலையில், இதனால் அக்கடைக்கு முன்பாக ரசிகர்கள் கூட்டம் திரண்டது. இந்த கடையின் திறப்பு விழா தொடர்பாக மாநகராட்சியிடமும், காவல்துறையினரிடமும் A to Z கடை நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், கடைக்கு வந்து ரசிகர்களை விரட்டியடித்த நிலையில், காரில் அங்கு வந்த புகழை காரில் இருந்தபடியே பேசி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும், கடைக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து சீல் வைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cook With Comali Pugazh Tirunelveli Vannarpettai Visit Officers Shield A to Z Mobile Shop


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->