பரந்தூர் வரை பறக்போகும் மெட்ரோ ரயில்; திட்ட அறிக்கை தாக்கல் செய்ய குழு! - Seithipunal
Seithipunal


இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி பரந்தூர் வரை நீட்டித்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்படும் மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

சென்னையில் முதல் கட்டம் மெட்ரோ பணிகள் 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு விம்கோ நகர் முதல் விமான நிலையம் சென்ட்ரல் முதல் பரங்கிமலை செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் சுமார் 69,120 கோடி ரூபாய் செலவில் 118 கிமீ தூரத்திற்கு நடைபெற்று வருகின்றன. மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியை மேலும் 93 கிமீக்கு நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பணியில் மூன்று வழிதடங்கள் அமைய உள்ளது. அதில் இண்டாம் வழித்தடம் புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நீட்டிப்பிற்கான  விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்பட உள்ளது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 13 கிராமங்கள் விவசாயிகள் மற்றும் மக்கள் அமையுள்ள விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் செய்து வரும் நிலையில், மெட்ரோ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு அவர்களை கவலை அடையச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Committee will be form and submit project report for metro project


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->