அதிமுக கொடி, சின்னம் தொடர்பான வழக்கு - 18 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில், கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஓபிஎஸ் தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் எனவும் ஓபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களை கேட்டறிந்தார்.

அதன் படி இரு தரப்பு வாதங்களும் கடந்த 12ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சதீஷ்குமார் வருகிற மார்ச் 18 ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு பிறப்பிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 18 admk flag and symbol case hearing


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->