வருகிற 14ம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

இதையடுத்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததாவது, "தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டபேரவை கூட்டம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும். 

மேலும், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் கடிதங்கள் பரீசிலனை செய்வதற்கு உள்ளது. அதில், சபை மரபுப்படி முடிவு எடுக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் இருவரும் சட்டபேரவையில் கன்னியமாக நடந்து கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 14 ministers meeting in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->