இளம்பெண் கடத்தி திருமணம்!! குற்றவாளிக்கு கொடுத்த அதிரடி தண்டனை!! - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் உள்ள மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் அன்பழகனின் மகன் ராஜ்குமார்(21) என்பவர் லாரி பட்டறையில் பெயிண்டராக உள்ளார்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கல்லூரி மனைவியை ஆசை வார்த்தை கூறி மயக்கி கடத்தி சென்று திருமணம் செய்தார்.

அந்த பெண்ணின் தாயார் இதுகுறித்து நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனால் போலீசார் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பின்னர் இது மகளிர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆதரவாக அரசு தரப்பு வக்கீல் சுசிலா களம் இறங்கினார். இந்த வழக்கு குறித்து தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. 

குற்றவாளியான ராஜ்குமார்க்கு ரூ. 2  ஆயிரம் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து குற்றவாளியான ராஜ்குமாரை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.

English Summary

College girl kidnapping


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal