வாயில் கை வைத்த நடத்துனரின் மூக்கில் விட்ட அதிகாரிகள்.. திருப்பூரில் பேருந்தை மறித்து அதிரடி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அரசு பேருந்து பயணத்தில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய நடத்துனருக்கு, பேருந்து நிழற்குடையில் வைத்து உடனடி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கோவை, திருப்பூர், சேலம் உட்பட 11 மாவட்டங்களுக்கு கொரோனா ஊரடங்கு தளர்வுகள் பொறுமையாகவே வழங்கப்பட்டது. கோவையை மையமாக வைத்து அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் 11 மாவட்டங்களில் நீட்டிப்பு செய்யப்பட்டு, 3 வாரங்கள் கடந்த பின்னரே ஒட்டுமொத்த தமிழகத்தில் இருந்து அம்மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 

மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரிக்காமல் இருப்பதை கருத்தில் கொண்டு, பயணிகளின் தேவைக்கேற்ப மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி 57 பயணிகளுடன் அரசு பேருந்து வந்துகொண்டு இருந்தது. பேருந்து நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் சமயத்தில், எச்சிலை தொட்டு பயணச்சீட்டை எடுத்து கொடுத்துள்ளார்.  

இதனைக்கண்டு அதிர்ச்சியான பயணிகள், கொரோனா காலத்தில் இதனைப்போன்று எச்சில் தொட்டு கொடுக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியும் அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பயணியொருவர் சத்தமே இல்லாமல் திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

சுதாரித்துக்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் திருப்பூருக்கு பேருந்து வருவதற்கு முன்னதாகவே, பேருந்து எங்கு வருகிறது என கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். பேருந்து அங்கு வந்ததும், அதனை இடைமறித்து நிறுத்தி நடத்துனரை கீழே இறங்கி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறியிருக்கின்றனர். 

இதற்கு பின்னர் தான் நடத்துனருக்கு பயணி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் கொரோனா மாதிரிகளை சேகரிக்க மருத்துவ ஊழியர்களும் தயார் நிலையில் காத்திருக்க, நடத்துனருக்கு அங்கேயே கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என எச்சரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பிற நடத்துனர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore to Tiruppur Govt Bus Conductor Spot Corona Testing due to Offence Corona Measure


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->