கோவை || அலைகடல் போல் திரண்ட கூட்டம்..! நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் கலை அறிவியல் கல்லூரியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் கலந்து கொண்டார். 

இதற்கு முன்னதாகவே இந்த நிகழ்ச்சிகே குறித்து யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்  இந்த தகவலில் முதலில்  வரும் ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த விளம்பரத்தை பார்த்து சுமார் 15 ஆயிரம் பேர் நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்நிலையில் அலைகடல் போல் திரண்டக் கூட்டத்தால், அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும், நிகழ்ச்சியை காண வந்தவர்கள் திரும்பிச் செல்லாமல், அங்கிருந்த கல்லூரியின் சுற்றுச்சுவர் மீது ஏறியும் உள்ளே செல்ல முயன்றுள்ளனர்.

Best Arts and Science colleges in Coimbatore | Dr. SNSRCAS

ஒரு கட்டத்தில் ஏராளமானோர் சுற்றுச்சுவர் மீது ஏறிச் செல்ல முயன்றதால், சுவர் இடிந்து விழுந்தது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளர் பிளோமினா உள்ளிட்ட காவலர்கள், மற்றும் இளைஞர்கள் காயமடைந்தனர். சுவர் இடிந்ததையும் பாராமல் விழுந்தவர்கள் மீதே ஏறிச் சென்றதால் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா? என்பது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore sns college function compound wall broke


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->