கோவை வடக்கு, புவனகிரி, திண்டுக்கல் தொகுதிகளை கைப்பற்றியது அதிமுக.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணிகள் அனைத்தும் சேர்த்து 158 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வெற்றிவாகை சூட்டியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 198 தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளது. 36 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக 138 தொகுதியிலும், அதிமுக 64 தொகுதியிலும் வெற்றி அடைந்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிமுக 12 இடங்களில் முன்னிலையில் இருப்பதாகவும், 24 தொகுதியில் திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாகவும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூஜன் 4,614 வாக்குகள் முன்னிலையில் வெற்றி அடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவன் 8,259 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் 17,541 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore North Bhuvanagiri Dindigul AIADMK Candidates Victory TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->