நரேந்திர மோடி "ரோடு ஷோவில்" விதி‌ மீறல் .!! விசாரணைக்கு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக சார்பில் நேற்று கோவையில் நடைபெற்ற வாகன பேரணியில் கலந்து கொண்டார். 

நீண்ட இழிபெரிக்குப் பின்பு பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணைக்கு கோவை மாநகர் காவல் துறை அனுமதி வழங்கி இருந்தது. 

பல்வேறு கட்டுப்பாடுகள் அனுமதி வழங்கப்பட்ட இந்த வாகன பேரணியில் தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  பள்ளி மாணவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது. 

ஆனால் நேற்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணியில் தேர்தல் விதிகளை மீறி பள்ளி மாணவர்களை அழைத்து சென்றதாக இருந்த குற்றச்சாட்டை அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிராந்தி குமார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ள அவர் விதிகளை மீறி இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore election officer ordered enquiry on Narendra Modi road show


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->