கோவை: சிறார்களிடையே போதைஊசி பழக்கத்தை ஏற்படுத்த முயன்ற இம்ரான் கான், அபுபக்கர் கைது.! - Seithipunal
Seithipunal


போத்தனூர் அருகே சிறார்களிடையே போதைஊசி பழக்கத்தை ஏற்படுத்த முயன்ற இம்ரான் கான் மற்றும் அபுபக்கர் சித்திக் ஆகிய 2 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் இட்டேரி ஓடை பகுதியில், கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் போதை ஊசி செலுத்திக்கொண்டனர். இவர்கள் இருவரும் போதை ஊசி செலுத்திக்கொண்ட பின்னர், போதையில் அங்கிருந்த சிறார்களை அழைத்த போதை ஊசி செலுத்திக்கொள்ள தூண்டியிருக்கின்றனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போத்தனூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவே, கிராம நிர்வாக அலுவலர் பால்துரைசாமி தனது உதவியாளருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இதன்போது, அதிகாரிகளை கண்ட இருவரும் அங்கேயே போதை ஊசி மருந்து போன்றவற்றை கீழே போட்டு தப்பி சென்றுள்ளனர். 

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலதுரைசாமி நேரடியாக மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் போத்தனூர் சாய்நகர் பகுதியை சார்ந்த இம்ரான் கான், அபுபக்கர் சித்திக் என்பது உறுதியானது. இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போத்தனூர் பகுதியில் சுற்றித்திரிந்த இம்ரான் கான் மற்றும் அபுபக்கர் சித்திக்கை கைது செய்து சிறையில் அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், ஏற்கனவே கோவை பகுதியில் இளைஞர்கள் போதை மாத்திரையை நீரில் கலந்து, அதனை ஊசி வாயிலாக ஏற்றுக்கொண்ட வீடியோ வெளியான நிலையில், இந்த கைது நடந்துள்ளது. தற்போது கோவையில் நடைபெறும் விஷயங்கள் எல்லாம் சிறார்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Drugs Injection 2 youngsters Arrest by Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->