நகைகளை அடகுவைத்து மருத்துவமனைக்கு மின்விசிறி வாங்கிக்கொடுத்த கோவை தம்பதிகள்.! - Seithipunal
Seithipunal


இளம் தம்பதி கொரோனா நோயாளிகளுக்காக தங்களின் நகைகளை அடமானம் வைத்து மின்விசிறிகள் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்த இளம் தம்பதி, அதே பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் சிங்காநல்லூரில் இருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் சென்று உள்ளனர். 

பின்னர் மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனை சந்தித்து, நோயாளிகளுக்கு இலவசமாக மின் விசிறிகள் வழங்க உள்ளதாக தெரிவித்த நிலையில், மின் விசிறிகளை பெற வந்த முதல்வருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

அங்கு ஒரு டெம்போ முழுவதும் மின் விசிறிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவீந்தரின், இது குறித்து விசாரிக்கையில் தாங்கள் அணிந்திருந்த நகைகளை அடமானம் வைத்து ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் 100 மின்விசிறிகள் வாங்கிக் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனால் வருத்தமடைந்த மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மிகவும் சிரமப்பட்டு மின்விசிறி ஏன் வாங்க வேண்டும்? பாதி மின்விசிறிகளை திரும்ப கொடுத்து உங்களை நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என்று தெரிவிக்கவே, தம்பதிகள் இருவரும் இந்த மின் விசிறிகள் நோயாளிகளுக்காக வாங்கி வந்துள்ளோம், அவர்களின் பயன்பாட்டிற்கு இது பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டனர். 

மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் கோவை மாவட்ட ஆட்சியர் நாகார்ஜுனாவை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறவே, மின்விசிறிகளை தங்களின் சிரமத்திற்கு இடையில் தரவேண்டாம் என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத தம்பதிகள் இருவரும், நாங்கள் கொண்டுவந்த மின்விசிறியை திரும்பி எடுத்துச் செல்ல மாட்டோம் என்று உறுதியாக கூறியுள்ளனர். மேலும், இது எங்களின் சக்திக்குட்பட்டே செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, தம்பதிகள் கொண்டுவந்த மின்விசிறியை பெற்றுக்கொண்ட மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், இருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்த தம்பதிகள் இருவரும் தங்களது பெயர் மற்றும் பிற விபரம் தொடர்பான எந்த தகவலையும் யாருக்கும் தெரிவிக்க கூடாது என மருத்துவமனை முதல்வர் ரவீந்திரனிடம் அன்பாக வேண்டுகோள் வைத்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore couple gift to fan for Hospital 28 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->