பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. விரைவில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய்  விற்பனை.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பேரிடர் போன்ற காலங்களில் பொது மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பாமாயில் எண்ணெய் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும் என்பதால், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணையை விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சமத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து மத்திய வேளாண் இணை அமைச்சர் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் முதற்கட்டமாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும் எனவும், பொது மக்களின் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coconut oil sale from ration Shop


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->