செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி - முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் : பல்லடத்தில் தாக்குதலுக்கு உள்ளான நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு அவர்கள் நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். 

ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு அவர்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள திரு நேசப் பிரபு அவர்களுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin order for NesaPrabhu Attack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->