முதல்வரின் கள ஆய்வு எதிரொலி.. 4 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட மூன்று மாவட்டங்களில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கொண்ட இந்த கள ஆய்வில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட அரசு அதிகாரிகள் 4 பேர் ஒரே நாளில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழ்நாடு அரசின் மூலம் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் சில பணியிட மாற்றம் செய்து கீழ்காணும் ஆறு ஆணையிடப்படுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கிருஷ்ணப்பிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் நகர காவல் துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி மாறுதல் அனைத்தும் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin field survey effect 4 govt officials transferred


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->