தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு.? வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தீவிர கட்டுப்பாடுகள், தடுப்பூசி முகாம்களை அதிகரித்ததால் தமிழகத்தில் விரிவாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. 

மூன்றாவது அலை முடிந்த நிலையில் நான்காவது அலை குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மேலும், தென் கொரியாவிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பாதிப்பு குறைந்து வந்தாலும், அண்டை நாட்டு நிலவரங்கள் பார்க்கும்போது எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில், தமிழக அரசு மேற்கொள்ள உள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin meeting for lockdown


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->