தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாவட்டம்.? முதலமைச்சர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததது. அதன்படி தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் ஆணை வழங்கியது.

இதில் ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. 

இந்தநிலையில், நாகப்பட்டினம்- ஒரத்தூரில் நடைபெற்ற புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலலமைச்சர் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். குடுமப நல மற்றும் சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அடிக்கல் நாட்டு விழாவுக்கு பின் பேசிய முதலமைச்சர், நாகப்பட்டினம் மாவட்டதிலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தமிழக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm announced may be mayiladurai has new district in tn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->