காலநிலை தொடர்பான செயல்திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் தலைமையில் நிர்வாகக் குழு.! அரசனை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதலமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. 

இன்று தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின் படி, இந்த நிர்வாகக் குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுனர்கள், தமிழக அரசின் மூத்த செயலாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, இந்தக் குழு காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்கவுள்ளது.  இக்குழு முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த குழு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைகள் மேற்கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டங்களை நிறைவேற்றும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

claimate realated action group head of chief minister


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->