தியேட்டர் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறையவில்லை: சினிமா ரசிகர்கள் கடும் அதிருப்தி ..! - Seithipunal
Seithipunal


56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ஜிஎஸ்டி வரி குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி இனி0 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரிகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. 28 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறையவுள்ளது. ஆனால், தியேட்டர் கட்டணமும் குறித்த ஜி .எஸ்.டி சீர்திருத்தம் மூலம் குறையும் என சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்கவில்லை. 

குறிப்பாக, 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட் கட்டணம் வைத்துள்ள தியேட்டர்களில் மட்டும் ஜிஎஸ்டி வரி, 12 சதவீதத்திலிருந்து 05 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையிலும் மற்ற நகரங்களிலும் எந்த தியேட்டரிலும் 100 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் கட்டணமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சில குக்கிராமங்களில் மட்டும் 100 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீசாவதில்லை என்பது கசப்பான உண்மை.

இதனால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் எந்த தியேட்டருக்கு போனாலும் 100 ரூபாய்க்கு மேல்தான் டிக்கெட் கட்டணம் உள்ளது. அதிலும் நகரங்களில் ரூ.200 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. இந்த டிக்கெட்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளது. இதை 05 சதவீதமாக குறைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் குறைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். அப்படி குறைத்தால் 200 ரூபாயில் 25 ரூபாய் வரை மக்களுக்கு டிக்கெட் கட்டணம் குறையும் என்றும்,  குறித்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தியேட்டர் கட்டணத்தில் மாற்றம் செய்யாதது ஏமாற்றம் தருகிறது என்று கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cinema fans are very unhappy that GST tax on theater fees has not been reduced


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->