பிரதமர் வீட்டுவசதி திட்ட முறைகேடு வழக்கு..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பிரதமர் வீடு வசதி வழங்கும் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சேக்ஸ்பியர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் 23 பேருக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாவட்ட பஞ்சாயத்து செயலர் வீடுகளை ஒதுக்கினார்.

அவர் ஒரே நபருக்கு இரண்டிற்கும் மேற்பட்ட வீடுகள் என 11 பேருக்கு ஒதுக்கியுள்ளார். எனவே சட்ட விரோதமாக வீடுகள் ஒதுக்கீடு மற்றும் நீதி முறைகேடு குறித்து அரியலூர் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கி அமர்வு "சமூகத்தின் அழுதட்டு மக்களுக்கு வீடுகள் வழங்குவது தான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம். பஞ்சாயத்து அதிகாரிகள் சிலர் நடவடிக்கையால் திட்டத்தின் நோக்கம் அடிபட்டு விடுகிறது.

நிதி முறை கேட்டில் ஈடுபட்ட பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புச் செயலர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்ட பயனாளர்களின் உண்மை தன்மையை அறிய, ஆவணங்களை சரி பார்க்க வருவாய் கோட்ட அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஆறு வாரங்களுக்குள் முடித்து ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC order to take action against officers for illegally PMAY


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->