வரும் மூன்று நாட்களுக்கு மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக மாவட்டங்கள்.! சென்னை வானிலை மையம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கமானது அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வந்தனர். இதுமட்டுமல்லாது சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் பஞ்சமானது நிகழ்ந்து வருகிறது. 

சென்னையில் இருக்கும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீரானது கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில்., அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 

இதுமட்டுமல்லாது தென்மேற்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் உள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

thunder, rain, storm,

தமிழகத்தில் உள்ள விருதுநகர்., திருநெல்வேலி., இராமநாதபுரம்., தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யலாம் என்றும்., வெப்பசலனத்தின் காரணமாக திண்டுக்கல்., மதுரை., திருச்சி., தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. 

இதுமட்டுமல்லாது கடந்த 24 மணிநேர கணக்கீட்டின் படி வேலூர் மாவட்டத்தில் 3 செ.மீ மழையும்., நீலகிரியில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்., சில சமயம் மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai weather report announce rain for tamilnadu district 12.09.2019


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->