இரண்டு நாள் திக்குமுக்காடும் சென்னை.! போக்குவரத்து எங்கு? எப்படி?...!!   - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரதமர் மற்றும் சீன அதிபர் சென்னைக்கு வருவதையொட்டி., வரும் 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பின் அடிப்படையில் சென்னையில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின் படி., வரும் 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் ஜி.எஸ்.டி.சாலை., அண்ணா சாலை., சர்தார் வல்லபாய் படேல் சாலை., ராஜிவ் காந்தி சாலை., கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும். இதனால் இந்த சாலையில் பயணம் செய்ய நினைப்பவர்கள் பயணத்தை முன்கூட்டியே துவங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வரும் 11 ஆம் தேதியில் காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையிலும் மற்றும் 12 ஆம் தேதியன்று காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையில் கனரக வாகனங்கள்., சரக்கு வாகனங்கள்., இலகுரக சரக்கு வாகனங்கள்., டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் மேற்கூறிய சாலைகளில் செல்ல அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11 ஆம் தேதியன்று பகல் 12.30 மணி முதல் மதியம் 2 மணிவரையிலும் பெருங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு வரும் வாகனம் அனைத்தும் ஜி.எஸ்.டி.சாலையில் அனுமதிக்காமல்., " 0 " சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக செல்லும் என்றும்., சென்னையின் தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கு வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை உபயோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும்., தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை உபயோகம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 ஆம் தேதியன்று மாலை 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை ஜி.எஸ்.டி சாலையில் வரும் வாகனங்கள் கத்திப்பாரா - கிண்டி சாலையில் அனுமதி செய்யப்படாமல்., 100 அடி சாலை வழியாக திருப்பி விடப்படும். 

Chennai, Chennai kathipara bridge, Chennai traffic, Chennai traffic images,

வரும் 11 ஆம் தேதியன்று 2 மணி முதல் 9 மணிவரை ராஜிவ் காந்தி சாலை வழியாக OMR நகருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோழிங்கநல்லூர் சந்திப்பின் மூலமாக பெரும்பாக்கம் வழியாக திருப்பி விடுபடவும்., கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து முட்டுக்காடு செல்வதற்கு அனுமதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் வரும் 12 ஆம் தேதியன்று காலை 07.30 மணி முதல் 2 மணிவரை ராஜிவ் காந்தி சாலை வழியாக OMR நகருக்கு வரும் வாகனங்கள்., சோழிங்கநல்லூரில் இருந்து வழக்கம் போல பெரும்பாக்கம் வழியாக திருப்பி விடப்படவும்., 12 ஆம் தேதியன்று காலை 7 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் வாகனங்கள் அக்கரை சந்திப்பில் இருந்து முட்டுக்காடு செல்ல அனுமதி கிடைக்காது என்றும்., இந்த மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்., சென்னைக்கு வரும் முக்கிய பிரமுகரின் பயணம் சிறப்பாக அமையவும்., பாதுகாப்பு தரவும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று காவல் துறையினர் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai vehicle passing road change due to china pm visit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->