மீண்டும் சென்னை - சேலம் இடையே விமான சேவை.! - Seithipunal
Seithipunal


மீண்டும் சென்னையிலிருந்து சேலம் நோக்கி விமான சேவை இயக்கப்படுவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து சேலத்திற்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை – சேலம் இடையேயான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் தினசரி சேவையை தொடங்குவதற்கு முன்வந்துள்ளது. அதன் படி சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 16ம் தேதி பெங்களூரு-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் முதல்கட்டமாக விமான சேவை இயக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை - சேலம் இடையிலான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai to salem flight service again start


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->