சென்னையில் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி! திமுக நிர்வாகி கைது!   - Seithipunal
Seithipunal


நான் தமிழக முதலமைச்சரின் உதவியாளர் எனக் கூறி, தலா ரூ.25000 பெற்று  பல கோடி ரூபாய் மோசடி செய்த திமுக நிர்வாகி மகாதேவ பிரசாத், அவரது மனைவி ஜெயஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை அருகம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் 'மோஹோ எக்ஸ்போர்ட்ஸ்' என்ற ஏற்றுமதி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் 25 ஆயிரம் முதலீடு செய்தால், மாதம் தோறும் மளிகை பொருட்கள் கொடுப்பதாகவும், அதனைப் பிரித்து பேக்கிங் செய்து கொடுத்தால், 3000 முதல் 10 ஆயிரம் வரை கமிஷனாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

இதனை நம்பி பல நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் முதலீடு செய்துள்ளனர். ஒரு சில மாதங்கள் மட்டுமே கமிஷன் தொகையை சரியாக வழங்கி வந்த அந்த நிறுவனம், பின்னர் கமிஷன் தொகையை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அலுவலகத்தை நேற்று முன்தினம் இரவோடு இரவாக காலி செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து 70-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தங்களை ஏமாற்றியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்த நிலையில், மோசடி மன்னனும் திமுக நிர்வாகியுமான மகாதேவ பிரசாத், அவரது மனைவி ஜெயஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai tn police moha enterprises


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->