சென்னையில் தேர்தல் பணியாளர்களின் தபால் வாக்குகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களில் 11,971  நபர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022-ஐ முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த 27,812 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டங்களாக 21 இடங்களில் ஏற்கனவே நடைபெற்றது.  இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட அலுவலர்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் 16,657 நபர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவம் 15 வழங்கப்பட்டது.  எஞ்சியுள்ள நபர்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர்.
படிவம் 15 வழங்கப்பட்ட 16,657 நபர்களில் 13,170 நபர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலிலும், 3,487 நபர்கள் பிற மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின்  வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, தபால் வாக்கு செலுத்த படிவம் 15 வழங்கியுள்ள  13,170  நபர்களில் 11,971 நபர்களுக்கு தபால் வாக்குகள் அவர்களின் முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai postal votes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->