சென்னையில் போக்குவரத்து விதிமீறலா?.. உங்களின் செல்லுக்கே தேடி வரும் ஆப்பு.. 3 நாட்களில் 13 ஆயிரம் சம்மன்.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து விதிமீறலுக்கு நவீன கேமராவுடன் அபராதம் விதிக்கும் நடைமுறையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 13 ஆயிரம் பேருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான விஷயங்களில் உடனடி நடவடிக்கை எடுத்து, போக்குவரத்து விதிமீறல் இல்லா சென்னையை உருவாக்குவதில் சென்னை மாநகர காவல்துறை முனைப்பு காண்பித்து வருகிறது. 

இதன்படி, சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பிரதான போக்குவரத்து சிக்னலில் நவீன கேமராவுடன் உடனடி அபராதம் விதிக்கும் தொழில்நுட்பம் கொண்ட அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக சென்னையின் 5 பகுதிகளில் இந்த செயல்முறை அமலுக்கு வந்தது. 

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சுமார் 13 ஆயிரம் பேருக்கு இணையவழி மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் பதில் வழங்க வேண்டும். 

அவ்வாறு விதிமீறலுக்கான விளக்கம் பெறப்படாத பட்சத்தில் அல்லது விளக்கம் அனாவசியமாக இருக்கும் பட்சத்தில், தகுந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அபராதம் கட்ட மறுப்பு தெரிவித்தால், அவர்களுக்கு தானியங்கி அடிப்படையில் அவர்களின் வாகன எண்ணில் அந்த தொகை மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டு, காவல் துறையினர் வசம் வாகன ஓட்டிகள் சிக்கும் நேரங்களில் அவை மொத்தமாக வசூல் செய்யப்படும். 

ஏற்கனவே மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மேற்கூறிய நடைமுறை அமலில் உள்ளது. இந்த நடவடிக்கையால் பெருமளவு போக்குவரத்து விதிமீறல் பிரச்சனை குறைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police Red Light Violation System 3 Days 13 Thousand Violation Registered Automatically


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->