செம்மரம் கடத்தியதாக சென்னை போலீஸ் ஆந்திராவில் கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாநில போலீஸார் கூறுகையில் சிவகங்கையை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி செய்து வருகிறார்.

அவர் நிலைய ஆய்வாளருக்கு ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலைய போலீஸார் சந்திரசேகர் மற்றும் அவருடன் 14 பேரை செம்மரம் கடத்தியதாககைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 டன் செம்மரக்கட்டைகள், 2 கார்கள், ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை தலைமைக் காவலர் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai police arrested in Andhra Pradesh for redwood smuggling


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->