இன்னும் தீர்க்கப்படாத மெட்ரோ இரயில் ஊழியர்கள் பிரச்சனை.! அடுத்து வெளியான அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ஊழியர்களது வேலைநிறுத்தம் தொடர்பாக சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை மற்றும் சி.ஐ.டி.யுவின் தமிழ் மாநிலக்குழு உதவி பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது., 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கோடு கூண்டோடு வேலைநீக்கம் செய்ததை ரத்து செய்யக்கோரி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. வேலை நீக்கம் தொடர்பாக நிர்வாக இயக்குநரை சந்திக்க சென்ற தொழிலாளர்களை பார்க்க மறுத்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டதால்தான் வேலை நிறுத்தம் வந்தது. இதையொட்டி உதவி தொழிலாளர் ஆணையரிடம் 30.04.2019 அன்று சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கனவே நிர்வாகத்திடம் ஊதிய குறைப்பு, விடுப்பு குறைப்பு, காண்ட்ராக்ட் முறை திணிப்பு போன்ற பல விஷயங்கள் பற்றி கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக நிர்வாகம் உதாசீனமே செய்து வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு சமரசப் பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது.

சமரசப் பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ள போது சமரச அதிகாரியிடம் வெளிப்படையான அனுமதி பெறாமல் யாரையும் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்று தொழிற்தகராறு சட்டம், 33(1) (b) ஷரத்து கூறுகிறது. இப்படிப்பட்ட அனுமதியே பெறாமல் 7 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது அப்பட்டமான  சட்ட விரோதமாகும். உயர்நீதிமன்றத்தில் சங்கம் தொடுத்த இன்னொரு வழக்கில் தற்போதையே விதிகளையே தொடர வேண்டும் என்ற உத்திரவும் உள்ளது. இதற்கும் விரோதமாகத்தான் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, சட்டவிரோத வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், யார்மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் இதர கோரிக்கைகள் பற்றி விரைவாகவும் சட்ட ரீதியாகவும் முடிவுகாண வேண்டும் என்றும் 30.04.2019 அன்று நடத்த சமரசப் பேச்சுவார்த்தையில் சங்கம் வலிறுத்தியது.  நிர்வாகம் எதையும் ஏற்க மறுத்துவிட்டது.

தொழிலாளர் அதிகாரி வேலை நீக்க உத்தரவை நிறுத்தி வைத்து வழங்குகள் எல்லாம் முடித்தபிறகு இறுதி நடவடிக்கை எடுக்கலாம் என்பதை தனது அறிவுரையாக கூறினார். இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமக்கள் சிரமத்தைப் போக்கவேண்டும் என்ற நோக்கில் தொழிற்சங்கம் இதை ஏற்றது. ஆனால் நிர்வாகம் இந்த அறிவுரையையும் ஏற்கவில்லை இது நிர்வாகத்தின் உச்சகட்ட தொழிலாளர் விரோதப் போக்கையும், வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் அக்கரையின்மையையுமே காட்டுகிறது. ஆனால், நிர்வாகமோ தொழிலாளர்கள் அதிகாரிகளை தாக்கினார்கள் என்றும் சிக்னலைக் கெடுத்தார்கள் என்றும் பொய்ப் புகார்களைத் தந்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. உண்மையில் தொழிலாளர் யாரும் ரயில் நிலையத்தில் பணியில் இல்லை.

இந்த நிலையில் வேலை நிறுத்தம் தொடருகிறது. 01.05.2019 அன்று மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை என்று தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடாவடியான போக்குகளை எதிர்த்தும். பொதுமக்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் கான்ட்ராக்ட் தொழிலாளர்களை வைத்து ரயில் சேவையை இயக்குவதை எதிர்த்தும் போராடுகிற தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai metro train problem tomorrow speech about to solve this problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->