மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது சலுகைகள் அல்ல; அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் - முதலமைச்சர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் ஐம்பத்து நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். 

அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:- "எந்த விதமான பிரச்னையாக இருந்தாலும் அதனை உடனடியாக சரி செய்வது தான் நம் ஆட்சி. இதற்கு முன்பு "ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்று அண்ணா கூறினார். 

ஆனால், நான் ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்கிறேன். எனக்கும், என் தங்கைக்கும் பெயர் சூட்டியது மட்டுமல்லாமல், உங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டி கண்ணியத்தை கொடுத்தவர் கலைஞர்தான்.

அந்த வகையில், நம் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தை என்றால் அது நம் கலைஞர்தான். அதனால் இது நம்முடைய குடும்ப விழா. இலவச பேருந்து அட்டை, உலக வங்கி நிதியுதவியுடன் கருவிகள், உதவித்தொகை, ஆவின் பாலகங்கள் அமைக்க முன்னுரிமை என்று பல திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக கொண்டு வரப்பட்டன. 

இவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அல்ல, உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள். மாற்று திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு செய்து வருகிற நிலையில், அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai kobalapuram fifty four Disabled people marriage stalin speach


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->