வணிக சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம்; 'பிரதமர் மோடி தலையிடம் வேண்டும்'; சென்னை ஓட்டல்கள் சங்கம் கடிதம்..! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத போட்டி காரணமாக  இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில், ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மையமாக வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வளைகுடா நாடுகளில் பெரு சேதம் ஏற்பட்டுள்ளதோடு, எண்ணெய் கப்பல், எண்ணெய் டேங்கர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகள் பெட்ரோல் டீசல் , எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் எதிரொலியாக இந்தியாவிலும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஹோட்டல் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக வணிக கேஸ் சிலிண்டர் விநியோகம் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என சென்னை ஓட்டல்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளனர்.

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் மருத்துவமனை, ஐ.டி. பார்க், மாணவர் விடுதிகள், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக ஓட்டல்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

அத்துடன், வணிக கேஸ் சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், ஓட்டல்களுக்கு விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்கள் எந்தத் தடையும் இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் சென்னை ஓட்டல்கள் சங்கம் அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Hotels Association writes to Prime Minister Modi asking him to take a lead on the commercial cylinder shortage issue


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->