உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தராக லலிதா நியமனம்!  - Seithipunal
Seithipunal


கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் பொறுப்பேற்றுக் கொண்ட  நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

நம் நாட்டின் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நீதிமன்ற அரங்குக்கு வரும் போது, அவர்களுக்கு முன்பாக 'சோப்தார்' எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை, சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, செங்கோலை ஏந்தியபடி வருவார்.

இது மரியாதை நிமித்தமாக, நீதிபதிகளின் வருகையை சமிக்ஞை கொடுத்து சோப்தார் வருவது வழக்கம். மேலும், நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது சோப்தார்-களின் அன்றாடப் பணி.

இந்த பணியில் இதுவரை ஆண்கள் தான் நிமிக்கப்பட்டு வந்தனர். அதனை மாற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். 

மேலும், கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் 40 சோப்தார் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் பெண் நீதிபதிகளுக்கு பெண் சோப்தார் நியமிக்கும் வகையில் 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக மதுரையை சேர்ந்த லலிதா சோப்தார் பணியில் சேர்ந்து உள்ளார். இவர் நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Hc Division lady Sopthar


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->