தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு மழை?..! வானிலை ஆய்வு மைய தகவல்.!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்திற்கு பரவலான மழையானது கிடைத்துள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடுத்தடுத்து உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக., தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தின் கன்னியாகுமரி., திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி., தேனி மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் நல்ல கனமழையானது பெய்து வருகிறது.

rain,

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வரும் நிலையில்., மேட்டூரில் அணை முழுவதுமாக நிரம்பியதை அடுத்து உபரி நீரானது காவேரி நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்த சமயத்தில்., அந்தமான் பகுதியில் மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சியானது உருவாகியுள்ளதாகவும்., இந்த மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறிய பின்னர்., சென்னையை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்., இது தொடர்பாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில்., 

rain,

பருவமழையின் காரணமாக தமிழகத்திற்கு அவ்வப்போது மழை பெய்து கொண்டு இருந்த நிலையில்., வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலைகள் தமிழகத்தை விட்டு விலகி சென்றது. இந்த தருணத்தில்., சென்னையில் இருந்து சுமார் 2 ஆயிரம் கிமீ தொலைவில் உள்ள வடக்கு அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சியானது உருவாகியுள்ளது. 

இந்த மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய பின்னர்., தமிழகத்தில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்., இது சென்னை மற்றும் ஆந்திரா., ஒடிசா போன்ற நகரினை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக ஆந்திராவிற்கு அதிகளவு மழை கிடைக்கும். 

சென்னையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் குறைந்தளவு மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும்., மேலும்., மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., சென்னையின் வெப்பநிலையானது அதிகபட்சமாக 32 டிகிரி செல்ஸியஸ் இருக்கலாம் என்றும்.., குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai have minimum rainfall


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->