வங்கிக்கணக்கு வைத்துள்ள முதியவர்களை குறிவைத்து நூதன மோசடி..! - Seithipunal
Seithipunal


வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் வைத்த வயதான நபர்களை குறிவைத்து, அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றிய முன்னாள் தனியார் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள ஜவஹர் நகர் பகுதியைச் சார்ந்த சந்திரமதி ஆசிர்வாதம் என்பவர் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், " அரி குமார் என்பவர் ஸ்ரீராம் அசோசியேட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறிய நிலையில், இதனை நம்பி ரூபாய் 15 இலட்சம் காசோலை கொடுத்ததாகவும், தற்போது வரை வட்டியையும் கொடுக்காமல், முதலீடு செய்து பணத்தையும் தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்தனர். அரி குமாரின் செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்கையில், அவர் திருப்போரூரில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. 

விரைந்து சென்று அரி குமாரை கைது செய்த நிலையில், தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த அரி குமார், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக வேலையிலிருந்து நின்றுள்ளார். பின்பு, வங்கியில் பணியாற்றி வந்த சமயத்தில் பிக்சட் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் வயதான நபர்களின் அலைபேசி எண்ணை பெற்று, தனது நிறுவனத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக வட்டி மற்றும் லாபம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். 

இவனை நம்பி வயோதிகர்களும் காசோலைகளை வழங்கிய நிலையில், இதன் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட முதியவர்களிடம், மொத்தமாக ரூபாய் 5 கோடி பணத்தை அபகரித்து இருக்கிறார். இதனையடுத்து விசாரணைக்கு பின்னர், இவனிடம் இருந்து 50 சவரன் தங்க நகைகள், கார், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த 90 இலட்சம் வங்கிக்கணக்குகள், மனைவியின் பெயரில் இருந்த பங்குச் சந்தை முதலீடு ரூ.50 இலட்சம் தொடர்பான கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Fraud Bank Ex Employee Cheated Aged Persons 15 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->