#Breaking: அழிவை கையில் எடுக்க, அனுமதி வழங்கிய நீதிமன்றம்.. பரபரப்பு தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணத்தால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன. இந்த வைரஸின் பரவலை குறைக்க ஊரடங்கு பெரும்பாலான நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற கடைகள் மூடப்பட்டது. இந்த வைரஸின் காரணமாக மக்களின் உயிர் பரிதாபமாக பலியானது ஒருபுறம் இருந்தாலும், இதன் நல்ல விஷயமாக பல நாடுகளில் தொழிற்சாலை மற்றும் வாகன மாசு குறைந்தது. இதனால் நீர் மாசு, நிலமாசு மற்றும் காற்று மாசு என பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருந்த மாசுவின் அழிவு குறைந்தது. 

இதன் அடிப்படையில், மதுபானத்தின் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளும் சரியானது. மதுபானத்தால் ஏற்படும் சண்டைகள், சச்சரவுகள், பாலியல் பலாத்காரங்கள் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், உடல் பாதிப்பு என்று பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நிம்மதி கிடைத்தது. மதுபான கடைகளின் மூடல் காரணமாக கள்ளச்சாராயம் போன்ற தொழில் திடீரென தலையை உயர்த்தி காண்பித்தாலும், காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் அதுவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்தியாவில் இதனை வைத்து பூரண மதுவிலக்கு அமலாக்க வேண்டும் என்றும், குறிப்பாக தமிழக இளைஞர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர். இதற்காக இணையத்தில் பல டேக்குகள் தினமும் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இந்த சமயத்தில், மூன்றாவதாக அமலாகிய ஊரடங்கில் சில தளர்வுகள் என்ற பெயரில், மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சில மாநிலங்களில் திறக்கப்பட்ட மதுபான கடைகளில் குடிமகன்கள் கூட்டம் குவிந்தது. அரசிற்கு பெரும் வருமானம் கிடைக்க துவங்கியது. 

இந்த நிலையில், தமிழக அரசு தமிழகத்தில் மே மாதம் 7 ஆம் தேதி முதல் மதுபான கடையை திறக்க அனுமதி அளிக்கவே, ஆத்திரமடைந்த இளைஞர்கள் இணையத்தில் தங்களின் எதிர்ப்பு குரலை பதிவு செய்தனர். மேலும், மது பழக்கத்திற்கு அடிமையான நபர்கள், இப்படியே மதுபான கடையை மூடியிருந்தால், இனி மதுபானம் அருந்த தோணாது என்ற நிலைக்கு வந்தனர்.

தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தனித்தனி வழக்குகள் துவங்கப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் விசாரணை செய்த நீதிபதி, இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பை அறிவிப்பதாக அறிவித்தனர். மேலும், முன்னதாக தமிழக அரசிடம் நீதிமன்றம் இணையத்தின் மூலமாக மதுபான விற்பனை மேற்கொள்ள இயலுமா? என்று கேள்வியை எழுப்பியிருந்தார். 

தமிழக அரசு மதுபான கடைகள் திறக்கும் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக, மதிய வேளையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருந்த பூரண மதுவிலக்கு தொடர்பான பூரண மதுவிலக்கு வழக்கு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றவாதத்தின் அடிப்படையில் தள்ளுபடியும் ஆனது. இந்த நிலையில், தற்போது மதுபான வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

இந்த தீர்ப்பில், மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் இருக்கும் மதுபான கடையை நிபந்தனையுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுக்கடைக்கு வரும் நபர்கள் தனிமனித  இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப்போன்று மதுபானத்தை இணையத்தளத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் திறப்பிற்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் நீதிமன்றம் உடைத்தெறிந்துள்ளது என்று சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஒரு நபருக்கு நாளொன்றுக்கு ஒரு பாட்டில் வீதமே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. பிற பொதுநல வழக்குகளில் அரசை சரமாரியாக விமர்சனம் செய்யும் நீதிமன்றத்தின் நீதியா? இது என்ற காட்டமான கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai court judgement about tasmac case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->