மீண்டும் சென்னையில் அதிகரிக்க துவங்கும் கொரோனா... மக்களே உஷார்.. சென்னை மாநகராட்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில், ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவில் உச்சத்தில் இருந்த கொரோனா குறைய துவங்கியது. இதனால் நாளொன்றுக்கு சென்னை மாநகரில் 950 பேருக்கு சராசரியாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

சென்னையில் கொரோனா பரவல் தொடர்பாக ஏழு நாட்களுக்கு ஒருமுறை சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், கடந்த 7 நாட்களில் கொரோனா பரவல் மீண்டும் 0.1 விழுக்காடு அளவு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சி மணாலி மண்டலத்தில் 6.3 விழுக்காடும், தேனாம்பேட்டை மண்டத்தில் 3.7 விழுக்காடும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.4 விழுக்காடும், வளசரவாக்கம் மண்டலத்தில் 2.1 விழுக்காடும், பெருங்குடியில் 1.8 விழுக்காடும், ராயபுரத்தில் 0.9 விழுக்காடும், தண்டையார்பேட்டையில் 0.7 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

ஆனால், அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலத்தில் 0.1 விழுக்காடும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.2 விழுக்காடும், அடையாறு மண்டலத்தில் 0.4 விழுக்காடும், திரு வி.க நகர் மண்டலத்தில் 0.7 விழுக்காடும், மாதவரம் மண்டலத்தில் 1.3 விழுக்காடும் குறைந்துள்ளதாகவும் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்யாதீர்கள். வெளியே சென்று வீட்டிற்கு வரும் போது கை, கால்களை சுத்தம் செய்யுங்கள்.. தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடியுங்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Corporation Announce Corona Virus Increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->