எஸ்.பி.ஐ ஏ.டி.எம் பணம் நூதன கொள்ளை விவகாரம்., சென்னை காவல் ஆணையர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் நடைபெற்ற நூதன மோசடியில் தமிழகம் முழுவதும் ரூ.48 இலட்சம் வங்கிப்பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் தற்போது வரை குற்றவாளிகள் என சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கட்டாயம் அவர்கள் ஒரு குழுவுடன் தான் இதனை செய்திருக்க வேண்டும். விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கிறது. விசாரணை முடிவில் அனைத்தும் உறுதியாகும். இந்த விஷயம் தொடர்பாக தனிப்படை ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

பிற வங்கிகளில் இது போன்ற குற்றங்கள் நடந்துள்ளதா? அல்லது பிற மாநிலங்களில் இது தொடர்பான குற்றங்கள் நடந்துள்ளதா? என்பது தொடர்பாக நடத்த விசாரணையில், சில மாநிலங்களில் புதிதாக நடந்துள்ளதாக தகவல் தெரியவருகிறது. 

இது புதிய வகையில் டெக்னீகை கண்டறிந்து நடைபெற்ற புதிய திருட்டு., கடந்த வாரத்தில் தான் பல மாநிலங்களில் இது தொடர்பான புகார்கள் உறுதி செய்பட்டுள்ளது. விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும் முழு தகவல் தெரிவிக்கப்படும். கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai City Police Commissioner Sankar Jiwal IPS Pressmeet about SBI ATM Money Cheating


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->