குப்பைத்தொட்டியில் இறந்த குழந்தையின் உடல்! அடக்கம் செய்ய காசு இல்லை.! அடுத்து நடந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சென்னைஅருகே திருவல்லிக்கேணி சி.என்.கே.சாலையில் உள்ள குப்பை தொட்டியில் சணல் பையின் உள்ளே  இருந்த பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கவ்வி இழுத்து சென்றது . 

இதைக் கண்ட அப்பகுதி மக்கள்,   திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை  அறிந்த காவல்துறை,  உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும்  பிற போலீசார்  சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று  குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர்.

 இதுகுறித்து தகவலை அறிய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில்  திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரியில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையை, அவரது கணவர் தனுஷ் குப்பைத்தொட்டியில் வீசி சென்றார் என்பது  தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார்  தனுசை பிடித்து  விசாரணை செய்த போது, அவர் அளித்த வாக்குமூலம்  போலீசாரை  அதிர்ச்சியடைய வைத்தது. 

அவர் போலீசாரிடம் கண்ணீருடன் தெரிவித்ததாவது, "என்னுடைய முதல் மனைவி இறந்துவிட்டார். 2-வது மனைவி கவிதாவுக்கு பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது. என்னால் துக்கம் தாங்க முடியாமல் 'டாஸ்மாக்' கடைக்கு சென்று மது அருந்தினேன். 

பின்பு, குழந்தையை அடக்க செய்ய வேண்டும் என்றால் ரூ.3 ஆயிரம் செலவாகும். எனது பாக்கெட்டில் ரூ.150 மட்டும் இருந்தது. அதில், 10 ரூபாய்க்கு சணல் பையை வாங்கி குழந்தையை போட்டு குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்தேன்" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைக்கேட்ட  உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தனுசுக்கு ஆறுதல் கூறி, 'காக்கும் கரங்கள்' அமைப்பில் உள்ள உறவுகள் மற்றும்  தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பச்சிளம் குழந்தையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai baby dead body case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->