பிரான்ஸ் செல்லும் விமானம் திடீர் ரத்து: தவிக்கும் பயணிகள்! - Seithipunal
Seithipunal


சென்னை, அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் நகருக்கு ஏர் பிரான்ஸ் விமானம் நேற்று புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் 276 பயணிகள் செல்வதற்காக சோதனைகளை முடித்துவிட்டு தயாராக இருந்தனர். 

விமானம் இயக்குவதற்கு முன்பு விமானி எந்திரங்களை சரிபார்த்த போது விமானத்தில் ஏசிக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதை கண்டறிந்தார். 

விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து ஏற்படும் என சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். 

இதனை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டு விமான இன்ஜினியர்கள் குழுவினர் ஆக்ஸிஜன் அளவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இருப்பினும் உடனடியாக சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் இந்த விமானம் இன்று காலை சென்னையில் இருந்து பாரிஸ் செல்லும் எனவும்  தெரிவிக்கப்பட்டதால் 276 பயணிகளும் சென்னை நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்தனர். 

இவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த நாடுகளுக்கு செல்ல இருந்தவர்கள் விமான ரத்து செய்யப்பட்டதால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் வருத்தம் அடைந்தனர். 

மேலும் விமானத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai airport France flight canceled


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->